மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 மே 2022

விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி!

விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி!

கரூர் மாவட்டத்தில் விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

‘நிலத்தில் வண்டல் போட்டால், விளைச்சலில் பாய்ச்சல் கொடுக்கும்’ என்பது கிராமப்புறங்களில் உள்ள சொல்லாடல். நீர்நிலைகள் ஊர் மக்களின் கட்டுப்பாட்டிலிருந்த காலங்களில் விவசாயிகள், கோடைக் காலங்களில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, ஏரிகளிலிருந்து வண்டல் மண் கொண்டு வந்து போடுவது வழக்கமாக இருந்தது. இதனால் ஏரிகளும் ஆழப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் இவை அரசின் கட்டுப்பாட்டில் சென்றதால், விவசாயிகள் தங்களது தேவைக்கு வண்டல் எடுக்க முடியாத சூழல் உருவானது.

இந்த நிலையில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண் ஆகியவற்றை விவசாயப் பயன்பாட்டுக்காக இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது.

விவசாயப் பயன்பாட்டுக்கு நஞ்சை நிலத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அதாவது 25 யூனிட்டும், புஞ்சை நிலத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அதாவது 30 யூனிட்டும், இதர பயன்பாட்டுக்கு, சொந்த வீட்டு உபயோகத்துக்கு 30 கன மீட்டர் அல்லது 10 யூனிட்டும், மண்பாண்டம் தயாரிப்பதற்கு 60 கன மீட்டர் அல்லது 20 யூனிட்டும் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதியின் கீழ் கட்டணமில்லாமல் விவசாய மேம்பாட்டுக்காக மனு செய்வதற்கான நிபந்தனைகள் குறித்தும் விளக்கியுள்ளார். அதில், "மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் மண், வண்டல் மண் தூர்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.

விவசாய காரியத்துக்காக வண்டல் மண்ணைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும் அல்லது குத்தகை பதிவேட்டின் பதிவு செய்யப்பட்டு குத்தகைதாரராக இருக்க வேண்டும். நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை, புஞ்சை), விவசாய நிலத்தின் விஸ்தீரணம் குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று கிராம கணக்குகள் மற்றும் மண், வண்டல் மண் எடுக்க பயன்படுத்தப்படும் வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண், வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்" என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

-ராஜ்-

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வியாழன் 19 மே 2022