மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 மே 2022

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

இந்தியாவில் அசைவ உணவுகளை அதிகம் விரும்புவது ஆண்களா, பெண்களா என்கிற கேள்விக்கான பதில், தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு, 2019-21ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அசைவ உணவு உண்பவர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. முன்னதாக 2015-16ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை ஒப்பிட்டு, தற்போதைய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை 83.4 சதவிகித ஆண்களும், 70.6 சதவிகிதப் பெண்களும் தினமும் அசைவ உணவு சாப்பிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் 2015-16ஆம் ஆண்டில் 78.4 சதவிகித ஆண்களும், 70 சதவிகிதப் பெண்களும் மட்டுமே அசைவ உணவை சாப்பிட்டு வந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பிரிவில், அசைவ உணவே சாப்பிடாமல் இருந்த ஆண்களில் தற்போது 16.6 சதவிகிதம் பேர் மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை சாப்பிடுவதும் தெரிய வந்துள்ளது. அதைப் போல 15 முதல் 49 வயது வரை உள்ள பிரிவில் அசைவ உணவே சாப்பிடாத பெண்களில் தற்போது 29.4 சதவிகிதம் பேர் மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை உண்பது தெரிய வந்துள்ளது.

-ராஜ்-

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

வியாழன் 19 மே 2022