மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 மே 2022

ஊட்டியில் தொடர் மழை: மூடப்படும் மலர்கள்!

ஊட்டியில் தொடர் மழை: மூடப்படும் மலர்கள்!

ஊட்டி மலர் கண்காட்சி நாளை (மே 20) தொடங்க உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்களைப் பாதுகாக்க பாலித்தீன் கவர்கள் மூலம் மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை, கன மழையாக கொட்டித் தீர்த்தது. குறிப்பாக குன்னூர், மஞ்சூர், ஊட்டி, மசினகுடி, கூடலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. ஒரேநாளில் 649 மி.மீ. மழை பதிவானது. கன மழையுடன் மேகமூட்டமான காலநிலை நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கனமழை காரணமாக, ஊட்டி அருகே கேத்தி பாலாடா சுற்று வட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவிலான பீட்ரூட் பயிர்கள் நீரில் மூழ்கின. மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் அழுக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலர்கள் அழுகாமல் இருக்க தோட்டக்கலை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன்படி மலர்கள் மீது பாலித்தீன் கவர்கள் கொண்டு மூடப்படும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசியுள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், "ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை (மே 20) தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான பல்வேறு வண்ண மலர்கள் தயார் நிலையில் உள்ளது. இந்தக் கண்காட்சியை காண மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அதனால் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால், தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்கள் அழுக வாய்ப்பு உள்ளது. அதனால் மலர்களைப் பாதுகாக்க பாலித்தீன் கவர்கள் மூலம் மூடப்படுகிறது. மழைப்பொழிவைப் பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்-

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 19 மே 2022