மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

கோழி பண்ணைகளைப் பராமரிக்காவிட்டால் உரிமம் ரத்து!

கோழி பண்ணைகளைப் பராமரிக்காவிட்டால் உரிமம் ரத்து!

கறிக்கோழி பண்ணைகளை முறையாகப் பராமரிக்காவிட்டால், பண்ணை உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் செஞ்சேரி, செஞ்சேரிமலை, ஜல்லிபட்டி, வதம்பச்சேரி, சித்தநாயக்கன் பாளையம், திம்மநாயக்கன் பாளையம், அப்பநாயக்கன்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

இந்தப் பண்ணைகளில் வளர்க்க விடப்படும் கோழி குஞ்சுகள் 42 முதல் 45 நாட்களில் இரண்டு கிலோ எடை கொண்ட கறிக்கோழிகளாக வளர்கின்றன. கறிக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்கு பின்னர் பண்ணைகளில் இருந்து பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி, திருப்பூர், கோவை மற்றும் கேரளா மாநிலத்துக்கு சரக்கு வாகனங்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் சுல்தான்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல பண்ணைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கோழிக்கழிவுகளில் இருந்து ஈக்கள் அதிகமாக உற்பத்தியாகி வீடுகளுக்கு படையெடுத்து வருகிறது என்று அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வட்டார சுகாதாரத் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பண்ணைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆய்வுக்குப் பின்னர் இதுகுறித்து பேசியுள்ள சுல்தான்பேட்டை வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர், "கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வாரம் ஒருமுறை கோழிக்கழிவுகளை பண்ணையில் இருந்து அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும். கிருமி நாசினி தெளிக்க வேண்டும். ஈக்கள் தொல்லை இருக்கக்கூடாது. பண்ணையை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அவ்வாறு உரிய முறையில் பராமரிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பண்ணை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

-ராஜ்-

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 18 மே 2022