மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

கோதுமை ஏற்றுமதிக்குத் தடை: 500 டிரக்குகள் முடக்கம்!

கோதுமை ஏற்றுமதிக்குத் தடை: 500 டிரக்குகள் முடக்கம்!

வெப்பம் காரணமாக உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உணவு தானியங்களின் உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், கோதுமை ஏற்றுமதிக்கு வர்த்தக அமைச்சகம் கடந்த வாரம் தடை விதித்தது. இந்த நிலையில், கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்யும் மத்திய அரசின் முடிவால் மத்தியப்பிரதேச வர்த்தகர்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக அனுப்பிய சுமார் 5,000 டிரக்குகள் நாட்டின் இரண்டு முக்கிய துறைமுகங்களில் முடங்கியுள்ளன.

இந்த கோதுமை ஏற்றுமதிக்கு எதிரான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வணிகர்களின் கூட்டமைப்பான மத்தியப்பிரதேசம் சகால் அனாஜ் தல்ஹான் வியாபாரி மகாசங் சமிதி என்ற அமைப்பு, இன்றும் நாளையும் 270 விவசாயப் பொருள் சந்தைகளில் வணிகத்தை மூடுவதாக அறிவித்தது.

“கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீரென தடை விதித்துள்ளதால், மாநில வணிகர்கள் அனுப்பிய தானியங்கள் ஏற்றப்பட்ட சுமார் 5,000 லாரிகள் குஜராத் மற்றும் மும்பை துறைமுகங்களில் நிற்கின்றன” என்று வியாபாரி மகாசங் தலைவர் கோபால் தாஸ் அகர்வால் தெரிவித்தார்.

மேலும், “கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்க மாநில அரசு வணிகர்களை ஊக்குவிப்பதால், விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை வாங்கிய பிறகு மத்திய அரசின் தடையால் வர்த்தகர்களின் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் தற்போது ஆபத்தில் உள்ளன” என்று வருத்தம் தெரிவித்தார்.

கோதுமை ஏற்றுமதிக்கு எதிரான தடைக்கு எதிராக, மாநிலத்தின் அனைத்து 270 விவசாய விளைபொருள் சந்தைகளிலும் வணிகர்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தங்கள் வேலையை நிறுத்துவார்கள் என்று கூறிய கோபால் தாஸ் வணிகர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஏற்றுமதி தடையை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 17 மே 2022