மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

கோதுமை ஏற்றுமதி தடையில் தளர்வுகள்!

கோதுமை ஏற்றுமதி தடையில் தளர்வுகள்!

கோதுமை ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் உத்தரவில் தளர்வுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. "கோதுமை சரக்குகள் தேர்வுக்காக சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மே 13ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்டிருந்தால், அத்தகைய சரக்குகள் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே காண்ட்லா துறைமுகத்தில் ஏற்றப்படும் கோதுமை சரக்குகளை அனுமதிக்குமாறு எகிப்திய அரசாங்கத்தின் கோரிக்கையை தொடர்ந்து காண்ட்லா துறைமுகத்தில் ஏற்றிக் கொண்டிருந்த சரக்குகளை அரசாங்கம் அனுமதித்தது. மொத்தம் 61,500 மெட்ரிக் டன் கோதுமை சரக்குகளை எகிப்துக்கு செல்ல அனுமதித்துள்ளது.

மற்ற நாடுகளுக்கு உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மற்ற நாட்டு அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் என்று இரண்டு வகையான காரணங்களுக்கு மட்டுமே தற்போது ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படுகின்றன. கோதுமை ஏற்றுமதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இந்திய அரசு உத்தரவிட்ட தடையைத் தொடர்ந்து, நேற்று உலகளாவிய சந்தைகள் திறக்கப்பட்டபோது சர்வதேச கோதுமை விலைகள் கிட்டத்தட்ட 6 சதவீதம் அதிகரித்தன. இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில் 4-8 சதவீதம் வரை விலை கடுமையாக வீழ்ச்சி கண்டது.

மேலும் இந்திய துறைமுகங்களில் ஏற்றுமதிக்கான 5000 லாரிகளில் கோதுமை சரக்குகள் முடக்க பட்டதால் பிரச்சனைகள் எழுந்தன. ஜி7 அமைப்பில் உள்ள நாடுகளும் இந்தியாவில் கோதுமை ஏற்றுமதி தடைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடையால், பல நாடுகளில் உணவு பற்றாக்குறை மற்றும் பொருளாதாரத்தில் வீழ்ச்சி காணும் என்று ஜி7 நாடுகள் குற்றம் சாட்டின. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

செவ்வாய் 17 மே 2022