மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தற்போது பண மோசடி வழக்கில் சிறையில் இருக்கிறார். அவரது மனைவியும் திஹார் சிறையில் உள்ளார். இந்நிலையில் சுகேஷ், மாதத்திற்கு இரண்டு முறைக்கு மேல் தனது மனைவி லீனா மரியா பாலை சந்திக்க உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

“சுகேஷ் ஏப்ரல் 23 முதல் மே 2 வரையிலும், பின்னர் மீண்டும் மே 4 முதல் மே 12 வரையிலும் உணவு உண்ணவில்லை. சிறை மருந்தகத்தில் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. பின்னர், இந்த தவறான நடத்தைக்காக அவருக்கு எதிராக தகுந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்று சிறை டி.ஜி. கோயல் கூறினார்.

திஹார் சிறை எண் 6ல் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவியுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே சுகேஷின் கோரிக்கை என்று கோயல் கூறினார். "இது தொடர்பாக, அவர் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு இரண்டு முறை, மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படுவது போல், மாதத்தின் ஒவ்வொரு முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளிலும், அவரது மனைவியுடன் சிறைக்குள் சந்திப்பு அனுமதிக்கப்படுகிறது ஆனால் சுகேஷ் கூடுதல் சந்திப்புகளை கோரினார், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

3 நிமிட வாசிப்பு

சமூகப் பணிகள்: ரூ.60,000 கோடி வழங்கும் கௌதம் அதானி

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

2,000 மாணவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் ஆளுமை மேம்பாடு திட்டம்!

செவ்வாய் 17 மே 2022