மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனியார்மயமாக்கல்

நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனியார்மயமாக்கல்

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தனியார்மயமாக்க இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே முன்மொழிந்துள்ளார்.

இலங்கை பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது, அன்றாடப் பொருட்களின் விலைகள் உயர்ந்து, பல வாரங்களாக பரவலாக மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. மார்ச் மாதத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கோரி வீதிகளில் இறங்கினர்.

விடியலுக்கு முந்தைய நடவடிக்கையில், மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே இலங்கை ராணுவம் அவரை வெளியேற்ற வேண்டியிருந்தது. அரசாங்கத்திற்கு ஆதரவான மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டு முறை பிரதமரின் டெம்பிள் ட்ரீஸ் தனியார் இல்ல வளாகத்தில் இரவோடு இரவாக அத்துமீறி நுழைய முயன்றதையடுத்து இராணுவம் வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில், "நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே எமிரேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரராக இருந்து நீக்கப்பட்டதையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2021 மார்ச் 31 வரை, அதன் மொத்த இழப்புகள் 372 பில்லியன் ரூபாயாகும்.” என்று பிரதமர் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.

இந்த தனியார்மயமாக்கல் மூலமாக மட்டும் இலங்கையின் பொருளாதாரம் மீண்டுவிடாது. ஆனால் இலங்கையை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்க இது ஒரு முதல் படி. மேலும், 1979ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 61 நாடுகளில் 126 இடங்களுக்கு உலகளாவிய பாதை வலையமைப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 17 மே 2022