மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

சமையல் எண்ணெய் இறக்குமதி சரிவு: மேலும் விலை உயர வாய்ப்பு!

சமையல் எண்ணெய் இறக்குமதி சரிவு: மேலும் விலை உயர வாய்ப்பு!

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ள நிலையில் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்று சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அது சுய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இருப்பதில்லை.

இறக்குமதி செலவுகள் அதிகரித்ததாலும் பெரும்பாலான துறைகளில் இறக்குமதியை அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 2019-2020ஆம் ஆண்டில் 18.12 மில்லியன் டன் அளவுக்கு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்திருந்த நிலையில் 2020-2021ஆம் ஆண்டில் 12.9 மில்லியன் டன் அளவிலான சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

தற்போது 2021-2022ஆம் ஆண்டுக்கான முதல் ஆறு மாதங்களில் மட்டும் இதுவரை 6.5 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சமையல் எண்ணெய் கடந்த 20 ஆண்டுகளின் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் எண்ணெய் இறக்குமதி 4 மில்லியன் டன்னாக இருந்த நிலையில் தற்போது 18 மில்லியன் டன் அளவுக்கு அதிகரித்துள்ளது. எனினும் அதில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வித்துக்கள் உற்பத்தி அதிகரித்து இறக்குமதியைக் குறைக்க வாய்ப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சர்வதேச சந்தையில் விலை அதிகமாக இருந்தாலும் இந்தியா தனது சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டு தேவையை ஈடுகட்ட உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததும் இறக்குமதி சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இறக்குமதி சமையல் எண்ணெயின் அளவு குறைந்தாலும் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையவில்லை. இது உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தபோதிலும் இறக்குமதி குறைந்ததாலோ அல்லது நுகர்வோரின் கொள்முதல் அளவு குறைந்து விட்டதாலோ என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதற்கிடையில் இந்தோனேசியா பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே இந்த ஆண்டில் சமையல் எண்ணெய் விலை உயர்வு எதிர்பார்ப்பை விட அதிகமாகத்தான் இருக்கும் என்று சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்-

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 15 மே 2022