மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

விற்பனை மந்தம்: ரூ.100 கோடி காடா ஜவுளி துணிகள் தேக்கம்!

விற்பனை மந்தம்: ரூ.100 கோடி காடா ஜவுளி துணிகள் தேக்கம்!

திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட காடா ஜவுளி துணி விற்பனை ஆகாததால் ரூ.100 கோடி துணிகள் தேக்கமடைந்துள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் இரண்டரை லட்சம் விசைத்தறிகள், 20,000 நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டு கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கடந்த வருடங்களில் கொரோனா பொது முடக்கத்தால் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கனவே உற்பத்தி செய்த துணிகளை அனுப்ப முடியாததால் ரூபாய் பல கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்தது. மேலும் வட மாநிலங்களுக்கு அனுப்பிய காடா துணிகளுக்கு அங்குள்ள துணி மொத்த வர்த்தகர்கள் அதற்குரிய தொகையை அனுப்ப முடியாத அளவுக்கு வட மாநிலங்களில் கொரோனா தாக்கம் முன்பு இருந்ததால் அவர்களிடமிருந்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி துணி உற்பத்தியாளர்களுக்கு வர வேண்டிய தொகை இன்னும் ரூபாய் பல கோடி அளவுக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது நூல் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. துணி மொத்த வியாபாரிகள் கேட்ட விலைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு அதன்படி விற்பனை செய்து வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் பல ஜவுளி உற்பத்தியாளர்கள் தொழிலை கைவிட்டு செல்லும் நிலை ஏற்படும் என்றும் பல்லடம் பகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாகவும் பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறியுள்ளார்.

-ராஜ்-

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 15 மே 2022