மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை!

கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை!

உள்நாட்டில் தொடர் விலையேற்றத்தைத் தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் கோதுமை விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஒன்றிய அரசு பரிசீலனை செய்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள ஒன்றிய அரசு, “சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருகிறது. இதையடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் அதிக விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு கோதுமை தருவதைக் குறைத்துள்ளனர். உள்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. கோதுமையை வாங்கும் தனியார், அதிக அளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என கருதி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதால் உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலை உயர்ந்து வருவதால் எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு மாதங்களாக கோதுமை விலை நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

-ராஜ்-

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 15 மே 2022