மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

ஷாங்காய் நகரில் கொரோனா தளர்வுகள் விரைவில் அமல்

ஷாங்காய் நகரில் கொரோனா தளர்வுகள் விரைவில் அமல்

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் பல மாகாணங்களில் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சீன நிதி மற்றும் உற்பத்தி மையமான ஷாங்காய், கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு சில வாரங்களாக உட்படுத்தப்பட்ட நிலையில் ஷாப்பிங் மால்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் போன்ற வணிகங்களை படிப்படியாக மீண்டும் திறக்கத் தொடங்கும் என்று நகரத்தின் துணை மேயர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

கொரோனா தொற்று போரில் இறுதியாக சில இடங்களில் கடுமையான ஊரடங்கை விதித்திருந்தது சீன அரசு. அந்த வகையில் ஷாங்காய் நகரும் 6 வாரங்களாக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கிய நிலையில் ஷாப்பிங் மால்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மீண்டும் கடைகளில் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷாப்பிங் செய்ய வாடிக்கையாளர்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் முடி சலூன்கள் மற்றும் காய்கறி சந்தைகள் குறைந்த திறனுடன் மீண்டும் திறக்கப்படும் என்று சீன துணை மேயர் சென் டோங் கூறினார் ஆனால் இந்த தளர்வுகள் எப்பொழுது என்று தெரிவிக்கவில்லை.

ஷாங்காயில் முழு ஊரடங்கின் போது குடியிருப்பாளர்கள் அத்தியாவசிய தேவை பொருட்களை வாங்க கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் பெரும்பாலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடிய விரைவில் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்று பொது மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

சீனாவின் ஜீரோ கொரோனா திட்டத்தை கொண்டுவர அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதில் பல கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சீனாவில் நடக்க இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகளும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

ஞாயிறு 15 மே 2022