மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

18ஆம் நூற்றாண்டு தமிழர் வாட்டிகனில் புனிதராக அறிவிக்கப்பட்டார்!

18ஆம் நூற்றாண்டு தமிழர் வாட்டிகனில் புனிதராக அறிவிக்கப்பட்டார்!

18ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தேவசகாயம், இன்று வாட்டிகனில் போப் பிரான்சிஸால் புனிதராக அறிவிக்கப்பட்டார். லாசரஸ் என்றும் அழைக்கப்படும் தேவசகாயம், வாடிகன் "அதிகரிக்கும் கஷ்டங்களைத் தாங்குதல்" என்று அழைக்கும் புனிதப் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியப் பாமரர் ஆவார். நீலகண்டன் பிள்ளையாக பிறந்து, 1745ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். மேலும் தேவசகாயம் என்ற பெயரை விட்டு லாசரஸ் என்ற பெயரைப் பெற்றார். சாதிப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடிய அவர், துன்புறுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.

2012இல், வாட்டிகன் அவரது தியாகத்தை அங்கீகரித்தது. 2013ஆம் ஆண்டில் ஏழாவது மாதத்தில் கர்ப்பமாக இருந்த ஒரு பெண் அவரிடம் பிரார்த்தனை செய்த பின்னர் ஒரு அதிசயம் சாட்சியமளித்ததை அடுத்து, தேவசகாயம் புனிதர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாட்டிக்கானின் அசல் அழைப்பிதழில் தேவசகாயத்தின் முந்தைய சாதி பெயரான "பிள்ளை" குறிப்பிடப்பட்டிருந்தது. "துறவி தேவசகாயம் சமத்துவத்திற்காக நின்று சாதிவெறி மற்றும் வகுப்பு வாதத்திற்கு எதிராக போராடினார். இந்தியா வகுப்புவாதத்தின் எழுச்சியை எதிர்கொள்ளும் நேரத்தில் அவரது புனிதத்துவம் வருகிறது" என்று தேவசகாயத்தின் சாதிப் பெயரை நீக்கக் கோரி வாடிகனுக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் கடிதம் எழுதினார்.

மேலும், சாதிப் பெயரைச் சேர்ப்பது தேவசகாயம் நோக்கத்தைத் தோற்கடிப்பதாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, வாட்டிகன் சாதி பெயரை அழைப்பிதழில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

வாட்டிக்கானில் நடைபெற்ற புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஃபாதர் ஜான் குழந்தை, “இந்தப் புனிதத்துவம் பாகுபாடு இல்லாமல் வாழ எங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த புனிதர் பட்டம், நிலவும் வகுப்புவாத விஷத்திற்கு எதிராக திருச்சபை நிற்க ஒரு சிறந்த வாய்ப்பாகும். தேவாலயம் இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் தோல்வியடைந்து, மதகுருமார்களை மையமாகக் கொண்ட நிகழ்வாக மாற்றினர்," என்று கூறினார்.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

ஞாயிறு 15 மே 2022