மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 மே 2022

தென்னாப்பிரிக்காவில் பரவும் புதிய வகை ஒமிக்ரான் திரிபுகள்

தென்னாப்பிரிக்காவில் பரவும் புதிய வகை ஒமிக்ரான் திரிபுகள்

தென்னாப்பிரிக்கா கொரோனா பாதிப்பு இரண்டு ஒமிக்ரான் துணை வகைகளால் எழுச்சியை கண்டு வருகிறது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள மற்ற நாடுகளுக்கும் மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளுக்கும் தற்போது ஒமிக்ரானின் பிஏ 4 மற்றும் பிஏ 5 திரிபுகள் பரவியுள்ளன, ஆனால் இது ஒமிக்ரான் முதல் அலையை போல் பாதிப்பு ஏற்படுத்துமா என்பது பற்றி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறினர்.

சுமார் மூன்று வாரங்களாக தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, நிறைய பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டாலும், இறப்புகள் குறைவாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சோவெட்டோவில் உள்ள கிறிஸ் ஹானி பரக்வநாத் மருத்துவமனையின் தடுப்பூசி மற்றும் தொற்று நோய் பகுப்பாய்வு ஆராய்ச்சியாளரான பேராசிரியர் மார்டா நூன்ஸ் கூறுகையில், “இந்த அடுத்த அலை என்று நாங்கள் அழைக்கவிரும்பவில்லை, நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளிலும் தயாராக இருக்கிறோம். மருத்துவமனைகளில் அதிக பேர் அனுமதிக்கப்பட்டாலும் மிக குறைவான இறப்புகளே பதிவாகி வருகிறது " என்று கூறினார்.

மேலும், "பெரும்பாலான புதிய வழக்குகள் இந்த இரண்டு திரிபுகளிலிருந்து வந்தவை தான். அவை இன்னும் ஒமிக்ரான் தான் ஆனால் மரபணு ரீதியாக சற்று வித்தியாசப்படுகிறது," என்று மார்டா நூன்ஸ் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் ஏப்ரல் தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் ஒரு நாளைக்கு சராசரியாக 300லிருந்து, இந்த வாரம் ஒரு நாளைக்கு சுமார் 8,000ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்கா தெற்கு பகுதியில் குளிர்காலம் நிலவி வருவதால் அங்கு தற்போது ஃப்ளு காய்ச்சல் பரவுவது வழக்கம். நாட்டில் கொரோனா பரவுவதால் சோவெட்டோவின் சியாவெலோ பகுதியில் உள்ள ஒரு கோவிட் சோதனை மையத்தில், கோவிட் பரிசோதனை செய்ய பலர் வந்துள்ளனர் ஆனால் அவர்களுக்கு ஃப்ளு காய்ச்சல் தான் என்று தெரிந்து சற்று நிம்மதியடைந்தனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 15 மே 2022