எம்பிஎஸ் நோய் – விரைவில் கண்டறிய விழிப்புணர்வு தேவை

public

கர்னூலில் பயிற்சி நரம்பியல் நிபுணர் கே. ஹேமந்த் குமார், 6 வயது குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தான மியூகோபாலிசாக்கரிடோஸ் எனப்படும் எம்பிஎஸ் வகை-I அரிய நோயைக் கண்டறிந்துள்ளார்.

கர்னூலில் உள்ள புத்வார்பேட்டாவைச் சேர்ந்த ஒரு பழ வியாபாரியின் மகளுக்கு மூன்று வயது நிறைவடைந்த பின்னரும் நடக்க முடியாமல், சிறுமியின் தலை சுற்றளவிலும் சிறிய அளவு அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. அவளுடைய பெற்றோர் பல மருத்துவமனைகளுக்குச் சென்றனர், ஆனால் வெவ்வேறு அறிகுறிகள் வெளிவரத் தொடங்கின. 3 வருடத்தில் பல ஆய்வுகள் மற்றும் ஆய்வக சோதனைகளுக்குப் பிறகு, சிறுமிக்கு டைப்-1 மியூகோபோலிசாக்கரிடோசிஸ் இருப்பது உறுதியானது என்று டாக்டர் ஹேமந்த் குமார் கூறினார்.

“இந்த மரபணு நோய்க்கு சிகிச்சை உள்ளது, ஆனால் அது விலை உயர்ந்தது, ஏனெனில் பெண் தனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வாரமும் என்சைம் ஊசி போட வேண்டும். ஊசி மருந்துகளுக்கு ஆண்டுக்கு 47 லட்சம் ரூபாய் செலவாகும். மேலும் அதோனி வருவாய் கோட்டத்தில் கர்நாடகா எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் இது போன்ற பல மரபணு நோய்கள் அதிகம் கண்டறியப்படுகின்றன.” என்று டாக்டர் ஹேமந்த் விளக்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் மே 15ஆம் தேதியான இன்று சர்வதேச எம்பிஎஸ் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது போன்ற நோய்களை முன்கூட்டியே கண்டறியும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை இந்த நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்திருந்தால் விரைவில் சிகிச்சையளித்து குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மருத்துவ செலவும் குறைவாக இருந்திருக்கும். ஒரு பழ வியாபாரியின் வருமானத்தில் 47 லட்சம் ரூபாய் என்பது சாத்தியமற்றது. இது போன்ற ஒன்பது வகையான எம்பிஎஸ் உடல்நலக் குறைபாடுகள் உள்ளன. அவற்றில் ஐந்து வகைகளுக்கு மட்டுமே மருந்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *