மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 மே 2022

தங்கத்துடன் போட்டிபோடும் தக்காளி!

தங்கத்துடன் போட்டிபோடும் தக்காளி!

தங்கம் விலை உயர்ந்து வருவது போல தற்போது தக்காளி விலையும் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தக்காளி கிலோ 80 ரூபாயிலிருந்து 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியின் விலை தற்போது 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாகப் பரவலாகக் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வரத்து குறைவு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.

திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 25 டன் முதல் 30 டன் வரை தக்காளி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வரத்து குறைவால் கர்நாடக மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். 28 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி கடந்த மாதத்தில் 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தக்காளி வியாபாரிகள் கூறுகின்றனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அங்கு மொத்த விற்பனையில் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள சில்லறைக் கடைகளில் ரூ.90ஐ கடந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதுபோன்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சமையல் சிலிண்டர் விலை 1000 ரூபாயைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சமையல் எண்ணெய், பருப்பு விலையும் அதிகமாக இருக்கும் நிலையில் சமையலுக்குத் தவிர்க்க முடியாத பொருளான தக்காளியின் விலை, தங்கத்துக்கு ஈடாக உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் புலம்பி வருகின்றனர்.

-பிரியா

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 14 மே 2022