மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

குப்பை கொட்டும் இடத்தில் கோலங்கள்!

குப்பை கொட்டும் இடத்தில் கோலங்கள்!

தேனி மாவட்டம், கம்பத்தில், தெருக்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க குப்பை கொட்டும் இடங்களில் கோலங்கள் போட்டு அசத்தி வருகின்றனர்.

கம்பம் நகராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மையை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் தெருக்களில் குப்பைகளைக் கொட்டிய வண்ணம் உள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நகராட்சி சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தைத் தேர்வு செய்து அங்கு பணியாளர்கள் கோலம் வரைந்து வருகின்றனர். குப்பை கொட்ட வருகிற பெண்கள், இந்த கோலத்தை பார்த்து விட்டு அதன் மீது குப்பைகளைக் கொட்டாமல் திரும்பி செல்கின்றனர்.

நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட இந்த நூதன விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை 33 வார்டுகளிலும் செயல்படுத்த நகராட்சி சுகாதாரத் துறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

-ராஜ்-

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 13 மே 2022