மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

சுகாதாரத்துறைக்கு அரசு ஒதுக்கிய நிதியில் 65 லட்சம் ரூபாய் முறைகேடு!

சுகாதாரத்துறைக்கு அரசு ஒதுக்கிய நிதியில் 65 லட்சம் ரூபாய் முறைகேடு!

தேனி பொது சுகாதாரத்துறையில் வாகன பயன்பாடு, நிதி முறைகேடு குறித்து இணை இயக்குநர் மதுசூதனன் தலைமையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி விசாரணை நடந்தது. இதில் துணை இயக்குநர், உதவி இயக்குநர், 8 வட்டார மருத்துவ அலுவலர்கள், டிரைவர்கள், ஆய்வாளர்கள் என 25 பேரிடம் விசாரணை நடைபெற்றது. அதன் அறிக்கை சுகாதாரத்துறை இயக்குனரிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் உதவி இயக்குனர் சாமி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்று இயக்குநருக்கு கோரிக்கை விடுத்தார் ஆனால் அவரது கோரிக்கைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து நிதி முறைகேடு குறித்த விரிவான அறிக்கையை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு சமர்பித்த உதவி இயக்குநர் விசாரணை நடத்த வலியுறுத்தினார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம் சார்பில் ஏன் முழுமையான விசாரணை நடத்தவில்லை என பொது சுகாதாரத் துறையினரிடம் கேள்வி எழுப்பினர். மேலும் தேனி பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் கொரோனா கால கட்டத்தில் உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் வாங்க பொது சுகாதாரத்துறைக்கு அரசு ஒதுக்கிய நிதியில் 65 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதில் சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்றோர், டாக்டர்கள், முன்களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கியதிலும் முறைகேடு நடந்தது தெரியவந்தது. 10 பேருக்கு உணவு கொடுத்துவிட்டு 100 பேருக்கு வழங்கியதாக கணக்கு எழுதியுள்ளனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 13 மே 2022