மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி !

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி !

2022ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேருவதற்காக நீட் தேர்வு மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கலந்தாய்வு நடந்து கொண்டிருப்பதால் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி இளநிலை மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 2021ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து கலந்தாய்வும், 2022ம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வும் ஒரே நேரத்தில் நடப்பதால் குழப்பம் ஏற்படும்.

இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் முதுநிலை தேர்வை தள்ளி வைத்தால் உள்ளுறை மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “தேர்வை ஒத்திவைப்பதால் குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்கள் பெரும்பாலானோரை பாதிக்கும்.தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து நாடு திரும்பி வரும்போது, நீதிமன்றம் வகுத்துள்ள நேர அட்டவணையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், தேர்வை தள்ளி வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன், மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படும். அந்த சிரமத்தை வழங்க நாங்கள் விரும்பவில்லை. எனவே தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.” என்று தெரிவித்தனர். ஆகையால் திட்டமிட்டபடி வருகிற 21ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 13 மே 2022