மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 மே 2022

திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலம் பணிகள் மீண்டும் தொடக்கம்!

திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலம் பணிகள் மீண்டும் தொடக்கம்!

திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலம் கட்டுமானத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலக் கட்டுமான பணிகள், கடந்த 2013-14ஆம் நிதியாண்டு 81.40 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி ரயில்வே சந்திப்பு, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதற்கு தேவையான நிலத்தை ரயில்வே நிர்வாகத்திடம் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும், மாநில நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தியது. மேலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதிக்கு தேவையான 66 சென்ட் நிலம் பாதுகாப்புத் துறையின் கைவசம் இருந்தது. அந்த இடத்தை மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க, பாதுகாப்புத் துறை அனுமதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் 80 விழுக்காடு முடிவடைந்த நிலையில் அதன் ஒரு பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 16.07.2018 அன்று திறந்து வைத்தார்.

எஞ்சிய பாலப் பணிகள் கடந்த 8 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறை அனுமதி கிடைக்காமல் முடங்கிக் கிடந்தது. சமீபத்தில் பாலத்தின் எஞ்சிய பணிகளுக்கு தேவையான நிலத்தின் மதிப்பு 8 கோடியே 45 லட்சத்து 72,961 ரூபாய் என பாதுகாப்புத் துறை நிர்ணயம் செய்தது. அதன் அடிப்படையில் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை அகற்றிவிட்டு, 8 ஆண்டுகளாக தடைபட்டுக் கிடந்த திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 13 மே 2022