மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 மே 2022

ஆம்பூரில் நாளை முதல் பிரியாணி திருவிழா!

ஆம்பூரில் நாளை முதல் பிரியாணி திருவிழா!

ஆம்பூர் பிரியாணி, ஆளை அசத்தும் அளவுக்கு கமகமக்கும். ஆம்பூர் பிரியாணியை ருசிக்கவே அந்தப் பகுதிக்குச் செல்பவர்கள் பலருண்டு. இந்த நிலையில், நாளை (மே 13) முதல் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியிலிருக்கும் அனைத்து பிரியாணிக் கடைகளையும் ஒன்றுசேர்த்து, பிரியாணி திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்.

ஆம்பூர் வர்த்தக மையத்தில் வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. 13ஆம் தேதியான (நாளை) வெள்ளிக்கிழமையும், 14ஆம் தேதியான (நாளை மறுநாள்) சனிக்கிழமையன்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருவிழா நடக்கிறது.

அதேபோல, 16ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அன்றைய நாளில் மட்டும் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பிரியாணியை ருசித்து சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

30-க்கும் மேற்பட்ட அரங்குகள், 20-க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா களைகட்ட இருக்கிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். நுழைவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘‘மனித ஒருமைப்பாட்டுக்காக பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் குஷியும் கும்மாளமுமாகக் கூடி ஆளுக்கொரு பிடி எடுத்து சாப்பிட வாங்க’’ என அழைப்பு விடுத்திருக்கிறார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா.

-ராஜ்-

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 12 மே 2022