ஸ்பெயின் – 4000 பெட்ரோல் நிலையங்கள் மூடும் அபாயம் !

public

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த போரால் உலகளவில் பல நாடுகளும் வர்த்தகர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போரை ஒரு முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் மற்றும் அதன் தலைவர்களின் பேச்சுவார்த்தை முயற்சி எடுபடவில்லை. 2 மாதங்களுக்கு மேலாக தொடரும் இந்த போர் முடியும் தருவாயில் உலகம் பொருளாதார ரீதியாக எந்த நிலையில் இருக்கும் என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் அரசு, எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும், இன்னும் சில சிக்கல்களை சந்தித்து வருகிறது.

முன்னதாக ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 சென்ட் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மானியத்திற்காக அரசு 15 செண்ட் செலுத்தும் என்றும் பெட்ரோல் நிலையங்கள் 5 செண்ட் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த கொள்கை முடிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் சிறு மற்றும் நடுத்தர பெட்ரோல் நிலையங்களுக்கு இதனால் பெருத்த இழப்பு ஏற்படும் என கண்டனங்கள் எழுந்தன.

இதனால் 350க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் நாடு முழுவதும் சுமார் 3,000 முதல் 4,000 பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என அந்நாட்டின் எரிபொருள் விநியோகஸ்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *