மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 மே 2022

சிறுவர்களுக்கான கார் பந்தயம்: தமிழக சிறுவன் முதலிடம்!

சிறுவர்களுக்கான கார் பந்தயம்: தமிழக சிறுவன் முதலிடம்!

மதுரை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் அருணின் மகன் 10 வயது அனுஜ் . இவர், தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே கார் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பார்முலா 1 என்று அழைக்கக்கூடிய கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது இவரின் விருப்பமாகவும், கனவாகவும் இருந்துள்ளது.

இவருடைய பெற்றோர் மகனின் முயற்சியை ஊக்குவிக்கும் வண்ணம், கர்நாடகாவில் உள்ள சிறுவர்களுக்கான கார் பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைத்துள்ளனர். இந்தநிலையில், சமீபத்தில் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான சிறுவர்களுக்கான கார் மெரிட்டர்ஸ் கப் 2022 சாம்பியன்ஷிப் பந்தயம் நடைபெற்றது. இதில் 9 வயது முதல் 12 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நடந்த சிறிய ரக கார் பந்தயத்தில் டெல்லி, அஸ்ஸாம், பிஹார், மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இளம் வீரர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிச்சுற்றில் கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தேர்வு பெற்ற நிலையில், தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட அனுஜ் மூன்று சுற்றில் இரண்டு சுற்றில் முதலிடம் பெற்று மெரிட்டர்ஸ் கப் 2022 வெற்றி பெற்றார். இதுகுறித்து கார் பந்தய வீரர் அனுஜ் கூறுகையில், “இந்த போட்டியில் முதலிடம் பெற்று உலக அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். வருங்காலத்தில் பார்முலா 1 கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். தான் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற விருதுகளை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்து ஆசி பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் கடந்த வருடம் கர்நாடகாவில் நடைபெற்ற 'கோ- கார்டிங் சாம்பியன்ஷிப்' கார் பந்தயத்தில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

புதன் 11 மே 2022