மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 மே 2022

பாலும் பால்மாவும்: இலங்கையிலிருந்து தமிழகம் கற்றுக் கொள்ளுமா?

பாலும் பால்மாவும்:  இலங்கையிலிருந்து தமிழகம் கற்றுக் கொள்ளுமா?

இலங்கை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் அடிக்கடி "பால்மா கூடக் கிட்டுவதில்லை" என்கிற வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பால் பவுடரைத்தான் இலங்கைத் தமிழில் பால்மா என்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால் எதற்காக மொத்த இலங்கையும் பால் பவுடரை உபயோகிக்கிறது என்று ஆச்சரியத்துடன் யோசித்துக் கொண்டிருந்தேன். காரணம் புரிய வந்தது.

"உயிர்களைக் கொல்வது பாவம்" என்று அன்பினை போதித்த புத்தபிரானை வணங்குகிற இலங்கையில் மொத்த மாடுகளையும் அடித்துத் தின்றுவிட்டார்கள் என்கிற அதிர்ச்சிச் சமாச்சாரம் நமது மூளைக்குள் உதிக்கவே பலமணி நேரம் பிடிக்கிறது. மாடுகளைக் கொன்ற பிறகு பால் எங்கிருந்து கிடைக்கும்? எனவே மொத்த நாடும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிற பால்பவுடரை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது!

கிராமப்புறங்களில் ஒன்றிரண்டு மாடுகள் இன்னும் இருக்கலாம் என்பதினைத் தவிர்த்து இலங்கையில் மாடுகளைக் காணுவது அபூர்வம்தான். நான் சொல்லுவது தவறென்றால் என்னைத் திருத்துங்கள். நான் தெரிந்து கொண்ட வரையில் இலங்கையில் மாடுகளைப் பராமரித்து வளர்க்கும் கலாச்சாரம் ஏறக்குறைய அழிந்துவிட்டது. இந்தியாவில் இருப்பதனைப் போன்ற பால்பண்ணைகள் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

மாடுகள் இல்லாத பூமியில் மண்வளம் காப்பது மிகவும் கடினம். இயற்கை விவசாயம் செய்ய மாட்டுச் சாணம் மிக முக்கியமான வஸ்து. அது இல்லாமல் இலங்கையர்கள் இயற்கை விவசாயம் செய்யப் புறப்பட்டது பெரிய தமாஷ்தான்.

இலங்கையிலிருந்து தமிழகம் கற்றுக் கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் இது. மாடுகள் அழிந்தால் அப்புறம் நாமும் பால்மாவுக்குப் பிறரிடம் கையேந்துகிற நிலைமை வரும். மண்வளம் குறைந்து விவசாயம் அழியும்.

முகநூல் - சுப்பிரமணியன் சுப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 11 மே 2022