மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

ஏற்காடு கண்காட்சி: 40 வகையான மலர்கள்!

ஏற்காடு கண்காட்சி: 40 வகையான மலர்கள்!

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கிய இடங்களில் ஒன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு. அங்கு ஏப்ரல், மே மாத இறுதியில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.

நடப்பாண்டு தொற்று குறைந்து வரும் நிலையில் மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது, அதனால் தோட்டக்கலை துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன்பு அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன் ஆகிய இடங்களில் 40 வகை மலர்களால் 2 லட்சம் செடிகளின் விதைகளை நடும் பணியைத் தொடங்கினர். அதில் பால்சம், ஜினியா, கால்வியா, கிரை சாந்தியம், ஜெரேனியம், பேன்சி, பெட்டுனியா, மேரிகோல்ட், ஆஸ்டர், கைலார்டியா போன்றவை அடங்கும். 4,000 டேலியா செடிகள் கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டிருந்தன, இந்தச் செடிகள் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு பதியம் செய்யப்பட்ட விதைகள் செடியாகி பூத்துக் குலுங்குகின்றன.

அண்ணா பூங்கா நிர்வாகத்தினர் அந்தத் தொட்டிகளை பூங்காவின் பல்வேறு இடங்களில் மக்கள் பார்வைக்காக வைத்துள்ளனர். தற்போது ஏற்காடு வந்து செல்லும் சுற்றுலாப் பயணியர் அந்தப் பூக்களை ரசித்து செல்கின்றனர். அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடக்க உள்ள திடல், கண்ணாடி மாளிகை ஆகிய இடங்களை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குவதால் மாவட்ட நிர்வாகம், மலர் கண்காட்சிக்கான நடத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 10 மே 2022