மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

இலங்கை - சமையல் எரிவாயு தட்டுப்பாடு: விறகுகளாகும் தமிழர்களின் படகுகள்!

இலங்கை - சமையல் எரிவாயு தட்டுப்பாடு: விறகுகளாகும் தமிழர்களின் படகுகள்!

தற்போது இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகள் உடைக்கப்பட்டு விறகுக்காக விற்பனை செய்யப்பட்டு வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களின் ஏராளமான விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசின் உத்தரவைத் தொடர்ந்து, இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடல் தொழில் மற்றும் நீரியல்வளத் துறை அதிகாரிகள் ஏலத்தில் விட்டனர்.

ஏலம் விடப்பட்ட படகுகளில் 130 படகுகள் நீண்ட நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டிருந்ததால், துருப்பிடித்த நிலையில் இருந்தன. இவற்றை உடைத்து விற்பனை செய்ய ஏலம் எடுத்தவர்கள் முடிவு செய்தனர். இதன்படி குறிப்பிட்ட படகுகள் அனைத்தும் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடைத்து பிரித்தெடுக்கப்பட்டன.

படகுகளை உடைத்து எடுக்கப்பட்ட மரக்கட்டைகள், பலகைகள் அனைத்தும் விறகுக்கு விற்பனை செய்யப்பட்டன. தற்போது இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விறகின் விலை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் தற்போது ஒரு கிலோ விறகு 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து, பிரித்தெடுத்த மரப்பொருட்கள், இரும்பு சங்கிலிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் பொது சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசால் ஏலத்தில் விடப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்பட்டு விறகாகவும், பழைய இரும்பு சாமான்களாகவும் எடை போட்டு இலங்கையில் விற்பனை செய்யப்படுவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்-

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 10 மே 2022