மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

சென்னையைக் குளிர்வித்த மழை: விமானங்கள் ரத்து!

சென்னையைக் குளிர்வித்த மழை: விமானங்கள் ரத்து!

அசானி புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உட்பட அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் குறிப்பாக மே மாதத்தில் மழை பொழிவதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #chennairain என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது பகுதியில் பெய்யும் மழையை ரசித்தபடி வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதுபோன்று #CycloneAsani என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயலான அசானி மேற்கு மற்றும் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும்.

கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 25 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மாலை 4 மணிக்குத் தெரிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடாவிலிருந்து 210 கிமீ தென்-தென்கிழக்கில், விசாகப்பட்டினத்திலிருந்து 310 கிமீ தென்மேற்கில், கோபால்பூரிலிருந்து (ஒடிசா) 530 கிமீ தென்மேற்கில், பூரியிலிருந்து (ஒடிசா) 630 கிமீ தென்மேற்கில் இந்த புயல் மையம் கொண்டிருக்கிறது.

அசானி புயல் எதிரொலி காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், மாதவரம், வியாசர்பாடி, கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர், அடையாறு, அண்ணாநகர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இதனால் கோடை வெப்பத்தால் தவித்து வந்த சென்னை வாசிகளில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

chennairain ஹேஷ்டேக்கில் மழை பெய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னையில் மழை பெய்வது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், “வரும் 13 ஆம் தேதி அசானி கரையைக் கடந்தவுடன் வெப்பநிலை அதிகரிக்கும், நிலக்காற்று வலுப்பெறும் என்பதால் அடுத்த இரு நாட்களுக்கு பெய்யும் மழையைச் சென்னை மக்கள் கொண்டாடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இன்று (மே 10) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

11.05.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம் பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனம் 23 விமானங்களையும் ஏர் ஏசியா 4 விமானங்களையும் ரத்து செய்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து ஹைதராபாத், ஜெய்ப்பூா், மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் 3 விமானங்கள் மற்றும் ஹைதராபாத், ஜெய்பூா், மும்பை ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரும் 3 விமானங்களை ரத்து செய்யப்பட்டன.

-பிரியா

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

செவ்வாய் 10 மே 2022