மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 மே 2022

கல்வராயன்மலை: குப்பைகளை அகற்றிய இளைஞர்கள்!

கல்வராயன்மலை: குப்பைகளை அகற்றிய இளைஞர்கள்!

கல்வராயன்மலை சுற்றுலாத் தலத்தில் கிடந்த குப்பைகளை இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து அகற்றியதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன்மலை அமைந்துள்ளது. ஏழைகளின் சுற்றுலாத் தலமான இங்கு பெரியார், மேகம், கவியம் உள்ளிட்ட ஒன்பது நீர்வீழ்ச்சிகளும், கரியாலூரில் படகு குழாமும் உள்ளது.

இந்த சுற்றுலாத் தலத்துக்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கள்ளக்குறிச்சி, சேலம், சங்கராபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி, சென்னை மற்றும் புதுச்சேரி பகுதி மக்கள் குடும்பத்துடன் வாகனங்களில் வந்து பெரியார் நீர்வீழ்ச்சியில் குளித்தும், படகு குழாமில் ஆனந்தமாக படகு சவாரி செய்தும் மகிழ்வார்கள்.

இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், காலி குடிநீர் பாட்டில்களை அதே பகுதிகளில் போட்டுச் செல்கிறார்கள். இதனால் அந்தப் பகுதிகளில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.

இதையறிந்த கல்வராயன்மலை, கச்சிராயப்பாளையம் பகுதி இளைஞர்கள் வனச்சரகர் கோவிந்தராஜ் தலைமையிலும், வனக்காப்பாளர் செல்வராஜ், இயற்கை ஆர்வலர் டாக்டர் சிந்துவள்ளி ஆகியோர் மேற்பார்வையிலும் பெரியார் நீர்வீழ்ச்சி, கரியாலூர் படகு குழாம், கோமுகி அணை வியூ பாயின்ட் போன்ற பகுதிகளில் கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தினர். இந்தச் செயல் குறித்து பேசிய பலர், "சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குப்பைகளைக் குவிக்காமல் இருப்பதற்கு இந்த நிகழ்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது" என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

-ராஜ்-

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

செவ்வாய் 10 மே 2022