மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 மே 2022

யோகாசனத்தில் அண்ணன் - தங்கை உலக சாதனை!

யோகாசனத்தில் அண்ணன் - தங்கை உலக சாதனை!

திருத்தணியில் டாக்டர் இராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆகிய இரண்டு அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் 14 வயது மோஹித். இவருடைய தங்கை எட்டாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி 13 வயது லக்க்ஷயா. இருவரும் தொடர்ந்து 5 ஆண்டுகளாக கடுமையான யோகாசனப் பயிற்சி எடுக்க, யோகாசனத்தில் உலக சாதனை படைக்க கடுமையான பயிற்சிகளை இவர்களுக்கு யோகா மாஸ்டர் டி.பிரகாஷ் குமார் வழங்கியுள்ளார்

பயிற்சி மேற்கொண்ட இரண்டு அரசுப் பள்ளி மாணவர்களும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற இந்த அமைப்பின் டைரக்டர் சுதாகர் மற்றும் போட்டியின் நடுவர்கள் பசுபதி செல்வம் ஆகியோர் முன்னிலையில் திருத்தணி மலைக்கோயில் மலையடிவாரத்திலிருந்து இந்தப் போட்டி நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மாணவன் மோஹித் சக்கராசனம், பத்மாசனம், நின்ற பாத ஆசனம் ஆகிய ஆறு ஆசனங்களை மலைக்கோயில் அடிவாரத்தில் இருந்து மலை மீது வரை 42 நிமிடங்கள் 26 நொடிகளில் செய்து சாதனை படைத்தார்.

மாணவி லக்க்ஷயா மலைக்கோயில் ராஜகோபுர பகுதியிலிருந்து படிக்கட்டுகள் வழியாக சக்கராசனம் போன்ற ஆசனத்தை செய்தவாறு 108 படிக்கட்டுகளை ஏறி சாதனை படைத்தார்.

இந்த மாணவி 4 நிமிடம் 5 நொடிகள் இந்த சாதனை செய்தார். மற்றும் ஐந்து நிமிடம் இவர் இந்த சாதனைக்கு எடுத்துக்கொண்டதாக நடுவர்கள் தெரிவித்தனர். வெற்றி பெற்ற இரண்டு அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை திமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி வழங்கினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 9 மே 2022