மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 மே 2022

இந்தியா - நேபாளம் ரயில் சேவை தொடக்கம்

இந்தியா - நேபாளம் ரயில் சேவை தொடக்கம்

இந்தியா, நேபாளம் நாடுகளை இணைக்கும் இந்தியாவின் முதல் ரயிலாக ஸ்ரீ ராமாயண யாத்திரை என்ற ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலின் கீழ் இயங்கும், முதல் ரயிலாக இருக்கும். அதே நேரத்தில், இந்த யாத்ரா ரயில் இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன், அதாவது ஐ.அர்.சி.டி.சி. (IRCTC) மூலம் இயக்கப்படும். ஸ்ரீ இராமாயண யாத்திரை எந்த வழித்தடத்தில் செல்ல இருக்கிறது என்பது இன்னும் சில நாட்களில் முடிவு செய்யப்படும்.

சமீபமாக ரயில்கள் குத்தகைக்கு விடப்படுகிறது. அதற்கு முன்பே, பாரத் கௌரவ்வால் இயக்கப்படும் இந்த யாத்ரா ரயிலை பற்றிய திட்டத்தை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியது. இந்த புதிய திட்டத்தில் இயக்கப்படும் முதல் ரயில் ஸ்ரீ இராமாயண யாத்ரா என்பதை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரயில்வே அமைச்சகம், இந்த யாத்ரா ரயிலின் முழு பயணம் கிட்டத்தட்ட 8000 கிலோமீட்டர் தூரம் உள்ளடக்கியது என்று கூறியுள்ளது. நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் இந்த ரயில் பயணிக்கும். இந்த ரயிலின் முதல் பயணம், ஜூன் 21ம் தேதியன்று டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்க இருக்கிறது.

ரயிலின் வழித்தடம், நேரம், முன்பதிவு டிக்கெட் விலை பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. நீண்ட தூர ரயில் பயணங்களில் ஐ.அர்.சி.டி.சி. வழங்கும் வசதிகள் இந்த ரயிலிலும் உள்ளன. இந்த ரயிலில் ஒரு பேண்ட்ரி கார் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன மற்றும் , பயணிகளின் பாதுகாப்புக்காக காவலர்களும் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 8 மே 2022