காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட விலங்குகள்!

public

2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. காய்கறி கண்காட்சியை நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். கண்காட்சியையொட்டி பூங்காவின் நுழைவு வாயிலில் தக்காளி, வெண்டை, பாகற்காய், கேரட், முட்டைகோஸ், காலிபிளவர் உள்பட 25 வகையான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காய்கறி கண்காட்சியில் தோட்டக்கலை சார்பில் மீன், கிட்டார் வடிவிலான கடிகாரங்களும் செய்யப்பட்டு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கத்திரிக்காய்களை கொண்டு யானையும், 2 மயில்களும், கேரட்டை கொண்டு டிராகன், முதலையும், பாகற்காய்களை கொண்டு டைனோசரும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி அதனை கொண்டாடும் வகையில் பூக்களை கொண்டு ஊட்டி 200 என்ற வாசகமும் வைக்கப்பட்டுள்ளது. கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து மயில், முதலை, கிளி, கங்காரு, பாண்டா கரடி கப்பல், மீன், டோரா, போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பயன்படுத்தப்பட்ட டயர்களை கொண்டு மான், மயில், காட்டுமாடு, கொக்கு, வாத்து, முயல் உள்ளிட்ட வனவிலங்குகளும் செய்யப்பட்டு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று நடந்த கண்காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பிற மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் உள்ளூர் மக்களும் பூங்காவில் குவிந்திருந்தனர்.

அவர்கள் பூங்காவில் பல்வேறு வகையான காய்கறிகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விலங்குகள் மற்றும் பொருட்களை கண்டு ரசித்தனர். மேலும் அவற்றுடன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *