மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 மே 2022

கிச்சன் கீர்த்தனா : பிளம்ஸ் ஸ்மூத்தி!

கிச்சன் கீர்த்தனா : பிளம்ஸ் ஸ்மூத்தி!

கோடையில் பழங்கள் ஜூஸாகும்... தயிர் லஸ்ஸியாகும்... பாலே பல்வேறு ருசிகளில் பானங்களாக மாறும்... மோரும்கூட வணிகரீதியில் பானமாக வெற்றி பெறும்... இதையும் அதையும் கலக்க முடியுமா என யோசிப்பதற்குள் 'மாக்டெயில்’ வந்து சேரும். இப்படி ஒவ்வொன்றும் இன்னபிற பொருள்களோடு கைகோத்துக்கொண்டு இன்சுவை பானங்களாகக் காட்சியளிக்கும். அவற்றில் ஒன்று இந்த பிளம்ஸ் ஸ்மூத்தி.

என்ன தேவை?

குளிரவைத்த கெட்டியான பாதாம் மில்க் - 2 கப் (முதல் நாள் இரவே அரை கப் பாதாமை ஊறவைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்)

ஸ்லைஸ் செய்த பிளம்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 3 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

எல்லா பொருட்களையும் பிளெண்டரில் சேர்த்து 3 நிமிடங்களுக்கு அடிக்கவும். ஐஸ்க்ரீம் கோப்பைகளில் நிரப்பி ஃப்ரூட் கேக் உடன் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: கேரட் முந்திரி ஸ்மூத்தி!

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 7 மே 2022