மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 மே 2022

வேதாந்தா விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் - மீன்பிடி தொழிற்சங்கம்!

வேதாந்தா விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் - மீன்பிடி தொழிற்சங்கம்!

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில நிர்வாக குழு கூட்டம், நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் வக்கீல் ஜெலஸ்டின் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் எஸ். அந்தோணி, சி.ஐ.டி.யூ. மாநில துணை பொது செயலாளர் குமார், செயல் அலுவலர் கருணாமூர்த்தி, பொருளாளர் ஜெயசங்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசின் குறைந்த நிலப்பரப்பு உரிமை கொள்கையின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடல் பகுதியில் இரு ஹைட்ரோ கார்பன் தொகுதிகள் வேதாந்தா நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொகுதி 2,574 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும். 2ஆவது தொகுதி விழுப்புரத்தில் 139 சதுர கி.மீ., வங்காள விரிகுடாவில் 1,654 சதுர கி.மீ. கடல் பகுதியை உள்ளடக்கியது. இந்த பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்காக ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது." என்று தெரிவித்தனர்.

மேலும், "கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைத்தால் கடல் வளம் பாதிக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் தமிழ்நாடு அரசு வேதாந்தா நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என எங்கள் அமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்." என்று கூறினர்.

கடந்த 2020ஆம் ஆண்டு நிலம் மற்றும் கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு கிணறுகள் அமைக்க மத்திய அரசின் அனுமதி அவசியம் இல்லை. மாநில அரசின் அனுமதியோடு ஆய்வு கிணறுகள் அமைக்கலாம் என்ற வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கிணறுகள் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 6 மே 2022