மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 மே 2022

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: வானிலை மையம்!

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: வானிலை மையம்!

தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல், அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகம், புதுச்சேரியில் நேற்றும், இன்றும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி வரை உள்ளதால், அதுவரை வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

கத்திரி வெயில் ஒரு பக்கம் வாட்டி வந்தாலும், 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், "வங்கக் கடலில் தெற்கு அந்தமான் அருகே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. அது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். இந்த பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மே 8ஆம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதனால், தெற்கு அந்தமானில் அடுத்த 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். மத்திய கிழக்கு வங்கக்கடலில் மே 8 வரையிலும் மணிக்கு 75 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசும். அதனால், குறிப்பிட்ட நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 6 மே 2022