மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 மே 2022

அரசுப் பள்ளிக்கு கிராம மக்கள் வழங்கிய சீர்!

அரசுப் பள்ளிக்கு கிராம மக்கள் வழங்கிய சீர்!

நாகை மாவட்டம், வாய்மேடு அருகே தகட்டூர் அரசுப் பள்ளிக்கு கிராம மக்கள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக ஊர்வலமாகக் கொண்டு வந்து அசத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் மலையன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு பரிசளிக்கும் விழா, பள்ளியின் சாலைக்கு இடமளித்தவர்களுக்கு பாராட்டு விழா, பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் சீர்வரிசையாகக் கொடுக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

இந்த விழாவில், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கிராம மக்கள், பள்ளிக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக அளித்தனர். முன்னதாக கிராம மக்கள் ஒன்றிணைந்து ‘நம் பள்ளி நமது பெருமை’ என்ற முழக்கத்துடன் மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு தேவையான எல்இடி டி.வி., தண்ணீர் சுத்திகரிப்பான், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், எழுதுப் பொருட்கள், நாற்காலி மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

இந்த விழாவைத் தொடர்ந்து அரசுப் பள்ளியில் புதிதாக ஆறு மாணவர்கள் சேர்ந்தனர். இந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

-ராஜ்-

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 5 மே 2022