மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 மே 2022

மதுரை ஷவர்மா கடைகளில் அழுகிய இறைச்சி!

மதுரை ஷவர்மா கடைகளில் அழுகிய இறைச்சி!

மதுரையில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை நடத்திய ஆய்வில், கெட்டுப்போன அழுகிய இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது உணவு பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் அதிகம் விரும்பும் ஃபாஸ்ட் ஃபுட் வகைகளில் ஷவர்மாவும் ஒன்று. இந்நிலையில் கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட கண்ணூர் கரிவெள்ளுரைச் சேர்ந்த 16 வயது சிறுமி தேவநந்தா உயிரிழந்தார்.

காசர்கோடு செறுவத்தூர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த ஐடியல் கூல்பார் என்ற கடையில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் தேவநந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி மரணம் குறித்து விசாரணை நடத்தியதில் கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரான மங்களூருவைச் சேர்ந்த முகம்மது அனஸ் மற்றும் ஷவர்மா தயாரித்த நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

அதுபோன்று கொச்சி உள்ளிட்ட நகரங்களில் சுமார் 50 உணவகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

இந்த சூழலில் தமிழகத்திலும் மதுரை மாநகர் பகுதியில் இயங்கக்கூடிய சுமார் 50க்கும் மேற்பட்ட ஷவர்மா கடைகளில் இன்று (மே 5) உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உணவு பாதுகாப்பு துறை ஆணையர் செந்தில் உத்தரவின்பேரில் மதுரை மாநகர் பகுதியில் இயங்கக்கூடிய கடைகளில் இன்று திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

கடைகளில் இருந்த சிக்கன் உள்ளிட்ட இறைச்சிகள் ஃபிரஷாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். ஷர்மாவுக்கு பயன்படுத்தப்படும் இதர சமையல் பொருட்கள் தரமானதாக இருக்கிறதா என்றும் சோதனை செய்தனர்.

இதில் 5 கடைகளில் பழைய சிக்கன் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இங்கிருந்து இருந்து 10 கிலோ அழுகிய சிக்கன் இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 5 கடைகளுக்கும் நோட்டீஸ் கொடுத்தனர்.

மேலும் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் இறைச்சிகளை பயன்படுத்தக்கடாது

சமைத்த உணவு பொருட்களை ஃப்ரீசரில் வைக்கக்கூடாது, உணவு பொருட்களில் வண்ணம் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

-பிரியா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வியாழன் 5 மே 2022