மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 மே 2022

அரசு ஊழியர்கள் இலங்கைக்கு நிவாரணம்!

அரசு ஊழியர்கள் இலங்கைக்கு நிவாரணம்!

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. மேலும் பொதுமக்களும், தன்னார்வலர்களும் உதவ வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முன் வந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து இலங்கை நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என அச்சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நூற்றாண்டு காலம் பாரம்பரியமிக்கதும், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சங்கங்களில் முதன்மைச் சங்கமாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு 40 ஆயிரம் டன் உணவு பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றினை இலங்கையில் உள்ள தொப்புள் கொடி உறவுகளுக்கு அளிக்க வேண்டும் எனவும், அதற்காக தங்களது பங்களிப்பினை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியாக அளிக்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் அடிப்படையில் இலங்கை மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட இசைவு தெரிவித்து உள்ளோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர், ஆசிரியர்களது ஒரு நாள் ஊதியத்தை இந்த மாதம் சம்பளத்தில் பிடித்துக் கொள்வதற்கு அரசாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு முதலமைச்சரை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 5 மே 2022