மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 மே 2022

ஒரே ஆண்டில் இரண்டு மடங்கான யுபிஐ பரிவர்த்தனை!

ஒரே ஆண்டில் இரண்டு மடங்கான  யுபிஐ பரிவர்த்தனை!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அவற்றில் யுபிஐ மூலமான பணப் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான முடிந்த ஏப்ரலில் யுபிஐ பணப் பரிவர்த்தனை ரூ.10 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. அதாவது, 9.83 லட்சம் கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்குப் பணப் பரிவர்த்தனை ஆனதில்லை எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு உயர்வாகும்.

கடந்த ஏப்ரல் 2021இல் 264 கோடி எண்ணிக்கையிலான யுபிஐ பரிவத்தனைகள் நடந்துள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.4.93 லட்சம் கோடி ஆகும்.

அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு மாறியதும், அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்ற அரசின் தீவிர முயற்சியும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க சலுகைகள் வழங்கியதுடன், ரொக்கப் பணப் பரிவர்த்தனையைக் குறைக்க ஏடிஎம்மில் பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள், கட்டணங்கள் உயர்வு போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் காரணமாக மக்கள் ரொக்கப் பணப் பரிவர்த்தனையைப் பெருமளவு குறைத்து வருகிறார்கள். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் யுபிஐ பரிவர்த்தனை மிகவும் எளிமையானதாகவும், விரைவானதாகவும் இருப்பது அதன் மீதான கவர்ச்சியை அதிகப்படுத்தியது. குறைந்தபட்ச ஸ்மார்ட்போன் பயன்பாட்டு அறிவு இருந்தால் போதும், யார் வேண்டுமானலும் யுபிஐ மூலமாகப் பணம் அனுப்பிவிட முடியும். மட்டுமல்லாமல் ஒரு ரூபாய்கூட அனுப்ப முடியும் என்பது யுபிஐ பரிவர்த்தனையின் முக்கிய அம்சமாகும்.

இதனால் 2022 ஏப்ரல் மாதத்தில் ரூ.558 கோடி அளவிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.9.83 லட்சம் கோடி.

கடந்த மார்ச் மாதத்தில் முதன்முறையாக யுபிஐ பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை 500 கோடி ரூபாயைத் தாண்டியது. ஏப்ரலில் மார்ச் மாதத்தை விட எண்ணிக்கையில் 3.33 சதவிகிதம் உயர்ந்தது. மதிப்பளவில் 2.36 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனை மதிப்பு ரூ.20 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்.

-ராஜ்-

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

செவ்வாய் 3 மே 2022