மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 மே 2022

இலங்கையிலிருந்து மேலும் 5 பேர் ராமேஸ்வரம் வருகை!

இலங்கையிலிருந்து மேலும் 5 பேர் ராமேஸ்வரம் வருகை!

கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து அடுத்தடுத்த நாட்களில் பலர் இலங்கையில் இருந்து படகுகள் மூலம் ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வர தொடங்கினர். கடந்த மாதம் 25ஆம் தேதி வரை 20 குடும்பங்களைச் சேர்ந்த 75 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்தனர். தமிழகத்திற்கு அகதிகளாக குழந்தைகளுடன் வந்த அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில், இலங்கையில் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு இருப்பதால் அங்கு வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு குடும்பத்துடன் வந்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. அதனை வைத்து கொண்டு முகாமில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று ராமேஸ்வரத்திற்கு வந்தனர். இலங்கையில் இருந்து நேற்று இரவு படகில் புறப்பட்டு வந்த அவர்கள் 5 பேரும், இன்று அதிகாலை ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு தவித்தபடி நின்ற அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு அழைத்து வந்தனர்.

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

திங்கள் 2 மே 2022