மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 மே 2022

அதிக ஒளி தரும் எல்.இ.டி முகப்பு விளக்குகள்: வாகன ஓட்டிகள் பாதிப்பு!

அதிக ஒளி தரும் எல்.இ.டி முகப்பு விளக்குகள்: வாகன ஓட்டிகள் பாதிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் கார், வேன்,சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவற்றில் விதிகளுக்கு புறம்பாக எல்.இ.டி முகப்பு விளக்குகளை பொருத்துவது அதிகரித்துவிட்டது. அதிக ஒளியை தரக்கூடியது என்பதால் அந்த விளக்குகளை வாங்கி கூடுதலாக வாகனங்களில் பொருத்தி விடுகின்றனர். இந்த நிலையில் தற்போதுள்ள எல்.இ.டி விளக்குகள் மிக அதிக அளவில் ஓளி தரக்கூடியது என்பதால் எதிரே வரும் வாகன ஓட்டுனர்கள் கடுமையாக கண்கள் பாதிக்கப்பட்டு தடுமாறி வருகின்றனர்.

பொதுவாக ஒவ்வொரு வாகனத்திற்கும் எந்த வகையான முகப்பு விளக்கு பொருத்த வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களில் பொருத்தப்பட்ட விளக்குகளையே எதிரே வாகனங்கள் வரும்போது ஒளி அளவை குறைக்கவில்லை என்றால் கண்களை கூசச்செய்து தடுமாற வைக்கும். இந்த நிலையில் அதிக ஒளி தரக்கூடிய எல்.இ.டி முகப்பு விளக்குகளையும் போட்டுக் கொண்டு வருவதால், எதிரே செல்லும் வாகன ஓட்டுனர்களின் கண்களில் திறன் குறைவு ஏற்பட்டு கண்கள் பாதிக்கப்படுவதோடு தடுமாறும் நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக கார்கள், வேன்கள், சரக்கு வாகனங்களில் அதிக அளவில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு, எதிரே வாகனங்கள் வரும்போது அந்த விளக்குகளை ஒளி அளவை குறைக்காமல் செல்கின்றனர். அதிலும் கிராமப் புறங்களில் உள்ள குறுகிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும் முதியவர்கள் இரவு நேரங்களில் இந்த எல்.இ.டி முகப்பு விளக்குகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இரவு நேரங்களில் சோதனையில் ஈடுபட்டு எல்.இ.டி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும் வாகனங்களை பிடித்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

திங்கள் 2 மே 2022