மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 மே 2022

சென்னை 2ஆவது விமான நிலையம்: இரண்டு இடங்களில் ஆய்வுக்குழு!

சென்னை 2ஆவது விமான நிலையம்:  இரண்டு இடங்களில் ஆய்வுக்குழு!

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை அதிகரித்து வருவதால் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் விமான சேவையை கையாளுவதில் ஏற்பட உள்ள சிக்கல்களைத் தவிர்க்க 2ஆவது விமான நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து பண்ணூர், பரந்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு இடங்களை 2ஆவது விமான நிலையம் அமைக்க அரசு குறிப்பிட்டு தெரிவித்தது. அதில் பண்ணூர் மற்றும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இடத்தை ஆய்வு செய்ய மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது.

இந்த இரண்டு இடங்களில் விமானங்களை இயக்கவும் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் அளிக்கவும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் மண்ணின் தரம், சுற்றுச்சூழல் போன்றவற்றையும் இந்த ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது.

இது குறித்து மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசுகையில், "இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் பண்ணூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்களைப் புதிய விமான நிலையம் அமைக்க கண்டுபிடித்துள்ளது. விமான சேவையை அங்கு தொடங்குவதற்கு தேவையான அளவுள்ள இடங்கள், இயற்கையான சூழல் அங்கு அமைந்துள்ளது. ஆனாலும் அந்த இரண்டு இடங்களும் விமானங்களை இயக்குவதற்கு உகந்த இடமா என ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகம் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை சந்தித்து விவாதிக்க உள்ளனர். அதன் பின்னர் ஆய்வு இறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைவில் 2ஆவது விமான நிலையம் அமைப்பதற்காக இந்த இரண்டு இடங்களிலும் ஆய்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

ஞாயிறு 1 மே 2022