மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 மே 2022

விலை வீழ்ச்சி: தோப்புகளில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்

விலை வீழ்ச்சி:  தோப்புகளில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் விலை வீழ்ச்சியால் தோப்புகளில் தேங்காய்கள் குவிந்து கிடக்கின்றன.

கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கொரோனா கால கட்டத்தில் கிணத்துக்கடவு பகுதியில் உற்பத்தியான தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வந்தது. ஒரு கிலோ கறுப்பு நிற தேங்காய் 30 ரூபாய்க்கும், வெள்ளை நிற தேங்காய் 29 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், உரிய விலை இல்லாதது அவர்கள் மட்டுமின்றி வியாபாரிகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் தேங்காய்களைக் கொள்முதல் செய்து, தோட்டத்தில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள வியாபாரிகள், "கொரோனா கால கட்டத்தில் தேங்காய்க்கு கடும் கிராக்கி இருந்தது. தற்போது உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், திடீரென விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ கறுப்பு தேங்காய் 26 ரூபாய் 50 பைசாவுக்கும், வெள்ளை தேங்காய் 25 ரூபாய் 50 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உரிய விலை கிடைக்காததால் தேங்காய்களை வாங்கி தோட்டத்திலே குவித்து வைத்துள்ளோம்.

இதற்கிடையில் கொப்பரை தேங்காய்க்கு ஒரு கிலோ 105 ரூபாய் 90 பைசா விலை நிர்ணயம் செய்து, அரசு கொள்முதல் செய்து வருகிறது. குறிப்பிட்ட அளவே கொள்முதல் செய்வதால், சிரமம் அடைந்து வருகிறோம். எனவே கொப்பரை தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்தது போன்று பச்சை தேங்காய்க்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்-

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 1 மே 2022