மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 மே 2022

இந்தியாவில் 4ஆவது அலைக்கு வாய்ப்பில்லை - ஆய்வில் தகவல்!

இந்தியாவில் 4ஆவது அலைக்கு வாய்ப்பில்லை - ஆய்வில் தகவல்!

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் அடுத்தடுத்து அலைகளை உருவாக்கியது. சில நாடுகள் 4ஆவது, 5ஆவது அலைகளை எதிர்கொண்டு பதிப்புகளை சந்தித்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் 3 அலை கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தியதால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இன்று காலை வரை நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 190 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும், வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் 4ஆவது அலை வரக்கூடும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஐஐடி நிபுணர்கள் கணிதிருந்தார்கள். இந்த நிலையில் டெல்லி, மராட்டியம், உத்தரபிரதேசம், அரியானா உள்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இது ஒமிக்ரான் வகை வைரஸ் என்று கண்டறியப்பட்டது ஆனால் இந்த வைரசால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

என்றாலும் கொரோனா அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளன. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக கூடுதல் இயக்குனர் சமீரான் வெளியிட்டுள்ளார்.

அந்த ஆய்வு தகவலில், "நாட்டில் சில பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. பரிசோதனை குறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது சாதாரணமாக வந்து போகக் கூடியது தான். தினசரி பாதிப்பு விகிதத்தைதான் கவனத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரிப்பது வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே 4வது அலை உருவாக வாய்ப்பே இல்லை. அதற்கான அறிகுறிகளும் நாட்டில் இல்லை." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 1 மே 2022