மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 மே 2022

வடமாநிலங்களில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை !

வடமாநிலங்களில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை !

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே வெயில் சுட்டெரிக்க துவங்கிவிட்டது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் அதி தீவிர வெயில் காலம் மே 4ஆம் தேதி துவங்குகிறது. எனினும் அதற்கு முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

நேற்று 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபேரன்ஹீட்டை தாண்டி பதிவானது. வட மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு ஏப்ரல் மாத வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் கடந்த 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு மிகவும் வெப்பமான ஏப்ரல் மாதத்தை எதிர்கொண்டன.

மத்திய இந்தியாவில் சராசரி அளவாக 37.78 டிகிரி செல்சியஸ் அளவும் வடமேற்கு இந்தியாவில் சராசரி அளவாக 35.9 டிகிரி செல்சியஸ் அளவும் வெப்பம் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.35 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். நாடு முழுவதும் கடந்த 122 ஆண்டுகளில் நடப்பு ஏப்ரல் மாதத்தில் பதிவான 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது 4ஆவது அதிகபட்ச வெப்பநிலையாகும். நாடு 1973, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அதிக வெப்ப நிலையை ஏப்ரல் மாதத்தில் கண்டது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 1 மே 2022