மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஏப் 2022

நான்கு மணி நேரத்தில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

நான்கு மணி நேரத்தில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமைதோறும் வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது. நேற்று (ஏப்ரல் 29) நடந்த சந்தையில் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் நான்கு மணி நேரத்துக்குள் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

வேப்பூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரிய நெசலூர், குளவாய், காட்டுமைலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பங்குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராமப் பகுதிகளில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகள் விற்பனை செய்ய வேப்பூர் சந்தைக்கு எடுத்து வருகிறார்கள்.

வருகிற 3ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் ஆடுகளை வாங்க திருச்சி, மதுரை, சென்னை, புதுச்சேரி, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி சென்றனர்.

கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு , சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தன. ஒரு ஆட்டின் விலை அதன் எடையைப் பொறுத்து விற்பனை செய்யப்பட்டது.

ரம்ஜான் பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் நான்கு மணி நேரத்துக்குள் 4 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகளும் ஆடு வளர்ப்போரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

-ராஜ்-

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 30 ஏப் 2022