மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 ஏப் 2022

பன்றிகளைப் பிடிக்க எதிர்ப்பு: அதிகாரிகளிடம் வாக்குவாதம்!

பன்றிகளைப் பிடிக்க எதிர்ப்பு: அதிகாரிகளிடம் வாக்குவாதம்!

விழுப்புரம் நகரில் பன்றிகளைப் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதை வளர்ப்போர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் பொது சுகாதாரத்துக்கு சீர்கேடாகவும், விபத்து ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலரும் புகார் அளித்தனர்.

இதையடுத்து பன்றி வளர்ப்பவர்கள் அதை பட்டியில் அடைத்து வைத்து வளர்க்க வேண்டும் எனவும் மீறி சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்தால் அந்த பன்றிகள் பிடிக்கப்படும் என நகராட்சி சார்பில் எச்சரிக்கை செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை நகராட்சி சுகாதார பணியாளர்கள் மருதூர், கே.கே. சாலை, சேவியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகளைப் பிடிக்க சென்றபோது பன்றி உரிமையாளர்கள், தாங்கள் வளர்த்து வரும் பன்றிகளை பிடிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி பணியாளர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

அதன் பின்னர் பன்றிகளை பிடிக்க கால அவகாசம் வழங்கக்கோரி பன்றி வளர்ப்போர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அப்போது பன்றி வளர்ப்போருக்கு ஏற்கனவே முன்னறிவிப்பு செய்து நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பன்றிகளைப் பிடிக்கக் கூடாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பன்றி வளர்ப்போர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பன்றிகளை பிடிக்கும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை செய்து தங்களிடமே மீண்டும் பன்றிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் நகராட்சி அதிகாரிகள் பன்றிகளை ஒப்படைக்காமல் விற்று விடுவதாக பன்றி வளர்ப்போர் குற்றம் சாட்டினர்.

உடனே கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

-ராஜ்-

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 29 ஏப் 2022