மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 ஏப் 2022

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் மஷ்ரூம் ஸ்டஃப்டு சீஸ் ஆலு போண்டா!

கிச்சன் கீர்த்தனா:  சிக்கன் மஷ்ரூம் ஸ்டஃப்டு சீஸ் ஆலு போண்டா!

மாலை நேர நொறுக்குத்தீனி வகைகளில் போண்டாவுக்குச் சிறப்பிடம் உண்டு. உருளைக்கிழங்கு போண்டா, கீரை போண்டா, முட்டை போண்டா என்று பல வகைகள். அவற்றில் இந்த சிக்கன் மஷ்ரூம் ஸ்டஃப்டு சீஸ் ஆலு போண்டா தனிச்சுவையாக இருக்கும்.

என்ன தேவை?

சிக்கன் - அரை கப்

பொடியாக நறுக்கிய காளான் - அரை கப்

முட்டை - 2

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடலை மாவு - ஒரு கப்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

போண்டா செய்ய...

உருளைக்கிழங்கு - 2

பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - ஒன்று

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாயத்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்)-அரை டீஸ்பூன்

சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி, இறக்கி ஆறவிடவும்.

அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சிக்கன் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, காளானைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாயத்தூள் சேர்த்து வதக்கி, முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால், ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு தண்ணீர் விட்டு மிதமான தீயில் சிக்கன் கலவையை நன்கு வேகவிட்டு, வெந்து ஈரத்தன்மை வற்றியதும், இறக்கி ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பேக்கிங் சோடா, உப்பு, தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். ஆறவைத்த உருளைக்கிழங்குக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும். அதன் உள்ளே சிறிய துளையிட்டு வதக்கி, வைத்துள்ள சிக்கன் கலவையை வைத்து மூடவும். பிறகு கரைத்து வைத்துள்ள கடலை மாவுக் கலவையில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: மட்டன் அண்ட் பீன்ஸ் கப் கேக் இட்லி

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 29 ஏப் 2022