மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஏப் 2022

சித்திரை திருவிழா: உடுமலையில் உருவார பொம்மைகள் உற்பத்தி

சித்திரை திருவிழா: உடுமலையில் உருவார பொம்மைகள் உற்பத்தி

திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் பாரம்பரியமாக மண்பாண்டங்கள் மற்றும் கிராமத்திருவிழாக்களுக்கான உருவாரங்கள் செய்யும் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. புக்குளம், கண்ணமநாயக்கனூர், மரிக்கந்தை, பூளவாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் பலர் தொழிலில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.

இருப்பினும், சிலர் பல்வேறு இடையூறுகளை சந்தித்தும், பாரம்பரியத்தை கைவிடாமல், இத்தொழிலை தொடர்ந்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கிராம கோவில்களில் அனைத்து திருவிழாக்களும் தடைபட்டன. இதனால் அகல் விளக்குகளை கூட உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியாமல், மண்பாண்ட தொழிலாளர்கள் தவித்தனர்.

இந்நிலையில் கிராம கோவில்களில் 2 ஆண்டுகளாக தடைபட்டிருந்த திருவிழாக்கள் இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக சித்திரை மாதத்தில், அனைத்து கிராமங்களிலும் சித்திரை திருவிழா நோன்பு சாட்டப்பட்டுள்ளது. இத்திருவிழாக்களில் மண்ணால் ஆன சுவாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்வு முக்கிய இடம் பிடிக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டர்கள் குவிந்து மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சாளையூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினரிடம் பேசுகையில், “பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும் இத்தொழிலை கை விடாமல் செய்து வருகிறோம். தற்போது பாப்பனூத்து விளாமரத்துப்பட்டி கிராம மதுரைவீரன் கோவில் திருவிழாவுக்காக, சுவாமி சிலை செய்யும் பணி நடக்கிறது. இதற்காக குடும்பத்தினர் அனைவரும் விரதமிருந்து, சுவாமி சிலை தயாரிப்பில் ஈடுபடுகிறோம். அனுமதி பெற்று தினைக்குளத்தில் இருந்து மண் எடுத்து, அதனுடன், புற்று மண் உள்ளிட்ட மண்ணை கலந்து தண்ணீர் விட்டு, தயார் செய்கிறோம். இப்பணிகளில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பணியாற்றுகிறோம். வருவாய் குறைவாக இருந்தாலும் இறைவனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகிறோம்.” என்று கூறினர்.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

திங்கள் 25 ஏப் 2022