மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஏப் 2022

நாளை முதல் குற்றாலத்தில் இரவிலும் குளிக்க அனுமதி!

நாளை முதல் குற்றாலத்தில் இரவிலும் குளிக்க அனுமதி!

தற்போது தென்மாவட்டங்களிலும் கேரளத்தின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் நாளை (ஏப்ரல் 25) முதல் இரவிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குற்றாலம் அருவிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் நாளை (ஏப்ரல் 25) முதல் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் தொடங்கியுள்ளதால் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படும் என்றும் விரைவில் கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறுகின்றனர் அங்குள்ளவர்கள்.

-ராஜ்-

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 24 ஏப் 2022