Eகிச்சன் கீர்த்தனா: தாளகம்

public

நிறைய காய்கறிகள் போட்டு செய்யப்படும் தாளகம், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் விருப்ப உணவாகும். திருவாதிரை தாளகம் என்பது ‘ஏழுகாய் குழம்பு’ என்று அழைக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டு தாளகம் செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு இந்த வித்தியாசமான உணவை படைக்கலாம்.
**என்ன தேவை?**
பறங்கிக்காய் – 100 கிராம்
கேரட் – 2
கத்திரிக்காய் – 4
உருளைக்கிழங்கு – ஒன்று
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க…
எள் – ஒரு டீஸ்பூன்
பச்சரிசி – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
தனியா – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
காய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். புளியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். கடாயைச் சூடாக்கி பச்சரிசி மற்றும் எள்ளை வறுத்து எடுக்கவும். பின்பு அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். பின் ஆறவைத்து சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். கனமான கடாயில், நறுக்கிய கேரட் மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். அவை பாதி வெந்ததும் பறங்கிக்காய் மற்றும் கத்திரிக்காய் சேர்த்து மஞ்சள்தூள், புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வேகவைக்கவும். காய்கறிகள் வெந்ததும் அரைத்துவைத்துள்ள விழுதையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கலந்து மிதமான சூட்டில் 7 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து தாளகத்தில் கலந்து மூடி வைக்கவும்.

**[நேற்றைய ஸ்பெஷல்: பழப் பச்சடி](https://www.minnambalam.com/public/2022/04/22/2/fruits-pachadi)**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *